ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகம் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் இன்று(26) முதல் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேகமாக பரவிய வைரஸ் தொற்று காரணமாக மறு அறிவித்தல் வரை காலவரையறையின்றி குறித்த வளாகம் மூடப்பட்டது.
இந்நிலையில் வைரஸ் தொற்று தொடர்பில் முழுமையான ஆய்வு நிறைவு பெற்றுள்ளதாகவும், மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என வைத்தியர்களால் அறிவிக்கப்பட்டுள்ளமையை தொடர்ந்து மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக விஞ்ஞான பீடத்திற்கு நிறைவு பெறாத பரீட்சைகள் நாளை(27) முதல் நேர அட்டவணைக்கு அமைவாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#reeshma..