கடந்த 3 மாதகாலப் பகுதிக்குள் புகையிரதங்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, புகையிரத திணைக்களத்தின் வருமானமும் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கம்பஹா, வெயாங்கொட, றாகம ஆகிய புகையிரத நிலையங்களிலும் ஹோமாகம, கொட்டாவ, பாதுக்க போன்ற புகையிரத நிலையங்களிலும் அதிக வருமானம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.