2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்காக விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் அவர்களின் பெறுபெறுகள் தொடர்பில் திருப்தியடையாத பட்சத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் 15ம் திகதிக்கு முன்னர் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேவேளை 163104 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கான அனுமதி பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பரீட்சைக்கு தோற்றிய 205 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
#reeshmaa..