ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இலங்கை வந்த இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று(28) அதிகாலை இலங்கை சுங்கப் பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 212 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் பெறுமதி சுமார் 2,100,000 ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.