தெனியாய இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரபல சிங்கள பாடகி ஜின்ஜரின் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் குறித்த கார் சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெறும் போது காரில் 4 பேர் பயணித்துள்ள நிலையில் , அவர்கள் அனைவரும் படுகாயமடைந்த நிலையில் தெனியாய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில், ஜின்ஜர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தர்ப்பத்தில், காரில் ஜின்ஜர் உள்ளிட்ட அவரின் 7 வயது மகன் மற்றும் அவரின் உறவினரின் மகனும் மற்றும் சாரதி ஆகியோர் இருந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
#G-Reeshma