அரசியல்வாதிகளின் உருவங்களை பயன்படுத்தி பதாதை மற்றும் சுவரொட்டிகளை காட்சிப்படுத்தல், தேர்தல் சட்டத்திற்கு அமைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அரசியல்வாதிகளின் உருவங்களை பயன்படுத்தி பிரச்சாரங்களில் ஈடுபடும் வேட்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
எனினும் எந்தவொரு வேட்பாளரினதும் கட்சி காரியாலயத்தில், அவரின் புகைப்படம் மற்றும் அவருடைய கட்சி தலைவர்களின் படங்களை காட்சிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வேட்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் உருவங்களை பயன்படுத்தி பதாதை மற்றும் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தல் தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.