மதுவரி திணைக்கள வடமேல் மாகாணத்திற்கான உதவி ஆணையாளரின் இல்லத்திற்கு கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பன்னல – மாகந்துர பிரதேசத்தில் உள்ள வீட்டிலேயே குறித்த கைக்குண்டு தாக்குதல் இன்று(02) அதிகாலை ஒரு மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் வீட்டிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று சேதமடைந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது உதவி ஆணையாளர் வீட்டின் மேல் மாடியில் உறங்கிக்கொண்டிருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு குளியாப்பிட்டிய சிரேஸ்ட காவற்துறை அதிகாரியின் தலைமையின் கீழ் 3 காவற்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
####