க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று(03) ஆரம்பமாகின்றன.
விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக 105 மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 35000 இற்கும் அதிக மதிப்பீட்டாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்தார்.
10 நாட்களுக்கு தொடர்ந்து இந்த பணிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மதிப்பீட்டு பணிகளின் பாதுகாப்பிற்காக 200 இற்கும் அதிக பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.