ஜப்பான் வெளியுறவு அமைச்சர் நாளை இலங்கை விஜயம்…

ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டாரோ கொனோ நாளை(05) தமது இலங்கை விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவரின் இலங்கைக்கான பயணமொன்று 15 வருடங்களின் பின்னர் இடம்பெறுகின்றது.

குறித்த பயணத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் சிலரையும் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திக்க உள்ளார்.

இலங்கையின் முன்னணி அபிவிருத்தி பங்காளர்களில் ஒன்றாக ஜப்பான் விளங்குகின்றதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.