50 ஆயிரம் மெற்றிக் டொன் உரத்தை ஏற்றிய கப்பல் எதிர்வரும் 8 ஆம் திகதி இலங்கைக்கு…

பாகிஸ்தானிலிருந்து 50 ஆயிரம் மெற்றிக் டொன் உரத்தை தாங்கி வரும் கப்பல் எதிர்வரும் 8 ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது அரச மற்றும் தனியார் துறையினரால் கப்பல்களின் மூலம் தருவிக்கப்பட்டுள்ள உரத்தை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் கப்பல் நாட்டை வந்தடைந்தவுடன், உரத்தை விநியோகிக்கும் பணிகள் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.