யாழில் குழந்தைகளின் பிறப்பு வீதத்தில் அதிகரிப்பு.. – சுகாதார நிலையிலும் முன்னேற்றம்..

கடந்த 2017ம் ஆண்டு மட்டும் யாழ்.போதனா வைத்தியசாலையில் 5,746 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், இத்தொகையானது கடந்த சில வருடங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது 12% இனால் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி பி.சத்யமூர்த்தி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்.வைத்தியசாலையில் குழந்தை இறப்பு வீதம் நூற்றுக்கு 1%ஆக குறைந்துள்ளதை முன்னிட்டு வைத்தியசாலை முகாமைத்துவ சபை மகிழ்ச்சியடைவதாகவும் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

அதி உயர் வசதிகளுடன் யாழ்.வைத்தியசாலை அபிவிருத்தியடைந்து வருவதோடு மக்களுக்கு சிறந்த வைத்திய சேவைகளை வழங்கக் கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளதோடு இன்று வைத்தியசாலையில் 1,700 வைத்தியர்கள் மற்றும் வைத்திய ஊழியர்கள் கடமையில் இருப்பதாகவும் யாழ்.வைத்தியசாலை முகாமைத்துவ சபை தெரிவித்துள்ளது.

#g-reeshma