சதொச நிறுவனங்களிற்கு 2 இலட்சம் தேங்காய்கள்…

எல்கடுவ மற்றும் குருநாகல் பெருந்தோட்ட நிறுவனங்கள் 2 இலட்சத்திற்கு மேற்பட்ட தேங்காய்களை நியாயவிலையில் விற்பனை செய்வதற்கு சதொச நிறுவனத்திடம் வழங்கியுள்ளது. எதிர்வரும் தைப்பொங்கலை முன்னிட்டு இந்த தேங்காய்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபிர் ஹசீம் ஆகியோரது அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த தேங்காய்கள் தைப்பொங்கலை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ளன.

மேலும், குருநாகல் பெருந்தோட்ட விற்பனை நிலையத்தில் ஒருவருக்கு 65 ரூபா வீதம் 10 தேங்காய்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் முகாமையாளர் ஜகத் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்

தைப்பொங்கலை முன்னிட்டு தமது நிறுவனத்திற்குட்டபட்ட தோட்டங்களில் பணியாற்றும் சுமார் 4000 பேருக்கு உலர் உணவும் தேங்காய்களும் சலுகை விலையில் வழங்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.