புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சைட்டம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சைட்டம் சர்ச்சை குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே குறித்த சங்கம் இவ்வாறு தெரிவித்திருந்தது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர். ஹரித அளுத்கே தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், குறித்த அறிக்கைகள் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வாக அமையாது. இதனால் இன்னும் பிரச்சினை அதிகரிக்குமே ஒழிய குறையாது. அரச நிறுவனமற்ற இவ்வாறு இலாப நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்படும் நடவடிக்கைகளை தோல்வியடையச் செய்ய அனைத்து சக்திகளுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
#reeshma