வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நேரத்தின் போது தங்களது தனிப்பட்ட சொந்த கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்பின் அலுவல் நிர்வாக உதவியாளர்களும் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலர் ஜான் கெல்லி பிறப்பித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தடை உத்தரவு இன்று(05) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளை மாளிகையில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் இரகசியமாக பத்திரிகைகளுக்கு செய்திகளாக வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை அதிபர் டிரம்ப் எழுப்பியிருந்தார். அதை தடுப்பதற்காவே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதேவேளை, இரகசியமாக செய்திகள் வெளியாவதை தடுக்க ஊழியர்களின் கையடக்கத் தொலைபேசிகள் வெள்ளை மாளிகையின் wireless Network உடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.