இரத்த தானம் செய்யுமாறு தேசிய இரத்த பரிமாற்ற மையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
டெங்கு மற்றும் ஏனைய நோய்களால் ஒவ்வொரு வருடமும் சேமித்து வைத்துள்ள இரத்த அளவு குறைந்து வருவதாகவும் ஆதலால் இரத்த தானம் செய்ய முன்வருமாறும் குறித்த மையம் தெரிவித்துள்ளது.
குறித்த தேசிய இரத்த பரிமாற்ற மையத்தின் அத்தியட்சகர் டாக்டர்.ருக்ஷான் பெள்ளன இது குறித்து தெரிவிக்கையில்;
ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் இரத்த தானம் வழங்குவது குறைவு. இதனாலேயே இரத்தத்திற்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்திருந்தார்.
நாரஹேன்பிடிய தேசிய இரத்த பரிமாற்ற மையத்தினூடாக அல்லது அருகிலுள்ள வைத்தியசாலையின் மருத்துவமனையின் இரத்த மையத்தில் இவ்வாறு இரத்த தானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களிடம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
#reeshma