உணவு பொருட்களை பொதியிட பயன்படுத்தப்படும் பொலித்தீன்(லஞ்சீட்) மற்றும் பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் பொலித்தீன் பையின் விலையும் அதிகரித்துள்ள நிலையில் உணவு பொதியொன்றின் விலை 20 – 30 ரூபாவால் நேற்று(08) முதல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலித்தீன்(லஞ்சீட்) மற்றும் பொலித்தீன் பையிற்கும் மேலதிகமாக 9.50 ரூபா அதிகளவு செலவு ஏற்படுவதால் இவ்வாறு விலையை அதிகரிக்க தீர்மானித்தாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.