தன்னை பொது செயலாளர் பதிவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்து வருவதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில் பொது செயலாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு தான் ஆயத்தமாக இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் போது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டணியை விட்டு விலகி தனித்து போட்டியிடப் போவதாக வெளியாகிய செய்தியையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் நிராகரித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கீழ் போட்டியிடும் என சுதந்திர கட்சியின் பொது செயலாளரான தான் தேர்தல் ஆணையாளரிடம் கடிதம் மூலம் அறிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கூட்டணியை விட்டு விலகி தனியாக போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
எப்படியிருப்பினும், அநுர பிரியதர்ஷன யாப்பாவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் பதிவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவரது ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்து வருவதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
(riz)