MR இனது கெப் வாகனத்தில் மோதுண்டு 04 பேர் வைத்தியசாலையில்….

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு வாகன விபத்தில் காயமடைந்த 04 பேரில் ஒருவர் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 03 பேரும் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 7 ஆம் திகதி கிரிந்த – கும்புருபிட்டி வீதியில் மலான பிரதேசத்தில் குறித்த இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு வாகனம், பாரவூர்தியொன்றை முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த முச்சக்கர வண்டியில் மோதுண்டு இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வரே காயமடைந்துள்ளனர்.

எனினும் குறித்த பாதுகாப்பு வாகனத்தில் இருந்த 5 பாதுகாப்பாளர்களுக்கும் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை.

விபத்து தொடர்பில் பாதுகாப்பு வாகனமும், முச்சக்கர வண்டியும் கம்புருபிட்டி காவல்துறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

 

#g…