டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட அறுவருக்கும் பிணை…

கடந்த 2008ம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், கடந்த ஆண்டு ஜுலை மாதம் 12ம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட ஆறு பேரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று(09) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு சந்தேகநபர் ஒரு இலட்சம் ருபா ரொக்கப் பிணையும், 10 இலட்சம் ருபா பெறுமதியான சரீரப் பிணையிலும் செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து சந்தேகநபர்களும் ஒவ்வொரு சனிக்கிழமையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை விசாரணைகளுக்கு இடையூறு ஏற்பட்டதாக அல்லது சாட்சியாளர்களை அச்சுறுத்தியதாக நீதிமன்றத்திற்கு தெரிய வந்தால் வழக்கு முடியும் வரையில் சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைப்பதாக நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.