கப்பலுடன் மீன்பிடிப் படகு மோதி விபத்து – இரு மீனவர்கள் உயிரிழப்பு…

கார்களை ஏற்றி வரும் கப்பல் ஒன்றுடன், மீன்பிடிப் படகொன்று மோதியதில் இரு இலங்கை மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தெய்வேந்திரமுனை கடற்பகுதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் மூவர் காப்பாற்றப்பட்டுள்ளதோடு, ஒருவரைக் காணவில்லை எனவும் கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.