மருந்து விலை குறைப்பின் பிரதிபலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் எனவும்
இலங்கையில் மருந்து விலை குறைக்கப்பட்டுள்ளது போன்றே சர்வதேச நிறுவனங்களும் மருந்து உற்பத்திகளின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.
குறித்த இந்த விலை குறைப்பின் காரணமாக ஆண்டொன்றுக்கு 09 பில்லியன் ரூபா பிரதிபலன் நாட்டுக்கு கிடைப்பதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், சர்வதேச மருந்து உற்பத்தி விலைகள் குறைக்கப்பட்டதன் பிரதிபலன் இலங்கைக்கு மாத்திரம் கிடைப்பது விஷேட அம்சமாகும் எனவும் கூறினார்.
#reeshma