அமெரிக்க ஜனாதிபதிக்கு டிரம்பிற்கு மனநல சோதனை தேவையில்லை என வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னதாக டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நேற்று(09) முதல் முறையாக அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு மனநல சோதனை எதுவும் செய்யவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக டிரம்ப உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார் என சர்ச்சைகள் உருவானது. அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிக்கும் எல்லோரும் மருத்துவ சோதனை செய்ய வேண்டும் என்பது கட்டாயம். அதன்படி டிரம்ப் இந்த மருத்துவ சோதனையை முன்பே செய்து இருக்க வேண்டும்.
இந்நிலையில், நேற்று டிரம்பிற்கு முதல் முறையாக மருத்துசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த மருத்துவ சோதனையின் முடிவு 12ஆம் திகதி இணையத்தில் வெளியாகும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன் Michael Wolff எழுதிய டிரம்ப் குறித்து ‘Fire And Fury: Inside the Trump White House” என்று புத்தகம் வெளியானது. இதில் பலரும் டிரம்ப் மனநலம் பாதித்தவர் என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#reeshma