Update – ஜனாதிபதியின் பதவிக் காலம் 6 வருடங்கள்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு அவரது பதவிக்காலம் 6 வருடங்கள் என நீதிபதியினால் உயர் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.

——————- UPDATE 11:50

2021ஆம் ஆண்டு வரையில் தாம் ஜனாதிபதியாக செயற்பட முடியுமா இல்லையா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றிடம் கருத்து கோரியமை தொடர்பில் இன்று(11) ஆராயப்படவுள்ளது.

இதன் பொருட்டு பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில், நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனக அலுவிஹார, கே.ரீ சித்ரசிறி, சிசுரு டி ஆப்ரு ஆகியோர் உள்ளடங்கிய ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன 9ஆம் திகதி ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

அந்நிலையில், 19ஆம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படல்லை. இதன்படி 6 வருடங்கள் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும்.

எனினும் 19ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma