நாட்டின் கிழக்கு , ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவ மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமாகாணம் மற்றும் அநுராதபுர மாவட்டத்தில் ஓரளவு மழைபெய்யக் கூடும் எனவும், பிற்பகல் 2.00 மணியின் பின்னர் பல மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலைவேளைகளில் பனிமூட்டமாக காணப்படக்கூடும் என்று திணைக்களம் இன்று(11) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மட்டக்களப்பிலிருந்து காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையிலான கடற்கரைபகுதிகளில் ஓரளவு மழைபெய்யும் எனவும் ஏனைய கடற்கரையோர பிரதேசங்களில் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.