பிணை முறி அறிக்கையின் 26 பிரதிகள் பாராளுமன்றில்…

பிணை முறி கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் பிரதிகளில் 26, இம்மாதம் 17ம் திகதி பராளுமன்றிற்கு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ இனால் குறித்த பிரதிகள் குறித்த திகதியில் பாராளுமன்றில் வழங்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 23ம் திகதி கூடவுள்ளது.

 

#reeshma