மதுபான சாலைகளது திறப்பு நேரத்தில் மாற்றம்…

நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான சாலைகள் திறக்கப்படும் நேரத்தில் மாற்றங்களை மேற்கொள்ள நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, மதுபான சாலைகளுக்கான திறப்பு நேரம் காலை 08.00 முதல் இரவு 10.00 வரை என தெரிவித்துள்ளது.

இதுவரை மதுபான சாலைகள் காலை 09.00 மணி தொடக்கம் இரவு 09.00 மணி வரை திறக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மதுபான சலைகளை திறந்து வைத்திருப்பதற்கு புதிய நேர அட்டவணை

#reeshma