சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் முதல்முறையாக பெண்களுக்கான கார் காட்சிக்கூடத்தை (showroom) தனியார் கார் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
அந்நாட்டின் ஜித்தா நகரில் தனியார் கார் நிறுவனம் புதிய காட்சிக்கூடம் (showroom) ஒன்றை திறந்துள்ளது. இது பெண்களுக்காக மட்டும் ஆரம்பிக்கப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் பெண்களுக்காக திறக்கப்பட்ட முதல் கார் காட்சிக்கூடம் இதுவாகும்.
இந்த காட்சிக்கூடத்தில் பெண் ஊழியர்கள் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நிறுவனம் சவூதியில் பெண்களுக்காக அதிக அளவில் ஆட்டோ மொபைல் காட்சிக்கூடமும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.