அதிகரித்த வேகத்தில் காற்று வீசும்.. – கடற்படையை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிப்பு..

காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 80Km இற்கும் அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் சில இடங்களில் இன்று(13) இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும், மழையுடனான காலநிலையானது எதிர்வரும் இரு நாட்களுக்கு தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

#rishma