பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் தனஞ்சய டி சில்வா..

இலங்கை அணி வீரரான தனஞ்சய டி சில்வா காயத்திலிருந்து மீண்டுள்ள நிலையில் பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடுவார் என கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறந்த துடுப்பாட்டகாரராகவும், சூழல் பந்து வீச்சாளராகவும் விளங்கும் தனஞ்சய டி சில்வா இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரராக திகழ்கிறார்.

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் தனஞ்சய டி சில்வாவுக்கு காயம் ஏற்பட்டது, இதனால் ஓய்வெடுத்து வந்த நிலையில் தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ளார்.

எனவே பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் மோதும் முதற் டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 31-ம் திகதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

#rishma