முறிகள் மோசடி தொடர்பில் விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்த அறிக்கை தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக இலஞ்ச ஊழல் மற்றும் குற்ற விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆம் திகதி இந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதாக இலஞ்ச ஊழல் மற்றும் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக இலஞ்ச ஊழல் மற்றும் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன மேலும் தெரிவித்துள்ளார்.