யாழ்ப்பாணத்தில் நேற்று(15) இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில், இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். ஆணைக்கோட்டை வராகி அம்மன் கோவில் அருகிலும், பூநாரி மடம் பகுதியிலும் நேற்று(15) இரவு இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பாக மானிப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.