மத்திய வங்கியின் பிணை முறி அறிக்கை நாளை(17) நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான அறிக்கையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலக தகவல்கள் ஊடாக அறிய முடிகின்றது.
நாடாளுமன்றம் எதிர்வரும் 23ஆம் திகதி கூடவுள்ளது. கடந்த 10ஆம் திகதி பிணை முறி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விசேட அமர்வு இடம்பெற்றது.
இதன்போது குழப்பம் ஏற்பட்டதையடுத்து, சபாநாயகரால் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#reeshma..