மதுபான விற்பனையில் பெண்களின் ஈடுபாடு குறித்து யுவதியொருத்தி ஜனாதிபதிக்கு பணிவிடை..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டை கண்டிக்கும் வகையில், பிரித்தானியாவில் வாழும் இலங்கை பெண்ணொருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

மதுபான விற்பனை நிலையங்களில் பெண்களை ஈடுபடுத்துவது மற்றும் மதுபான சாலைகளை திறந்து வைக்கும் நேரத்தை மாற்றம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று(15) முதல் இரத்து செய்யப்படுவதாக ஜனாதிபதி அறிவித்தார்.

இந்நிலையில் பிரித்தானியா ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கற்கும் இலங்கை மாணவியான காவிந்தியா தென்னக்கோன் என்பவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு டுவிட்டர் ஊடாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நான் இலங்கை பெண். மதுபானம் விற்பனை செய்யும் நிலையில், ஒக்ஸ்போர்ட்டில் கற்று வருகின்றேன். உங்கள் நாட்டு பெண்கள் தங்கள் குறித்து தீர்மானம் மேற்கொள்ளும் அளவு சுயாதீனமானவர்கள் என்பது உங்களுக்கு தெரியாது. இரண்டு நாட்களுக்கு முன்னர் இளம் பெண் ஒருவர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டார். அவ்வாறான உண்மையான பிரச்சினை குறித்து அவதானம் செலுத்துங்கள். உங்கள் ஆணாதிக்கத்தை பின்னால் வைத்து கொள்ளுங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

#reeshma..