தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரச சொத்துக்களை பயன்படுத்த தடை…

உள்ளுராட்சி மன்ற தேர்தல்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்தல், அரச அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை பயன்படுத்துவது சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.