அரச – தனியார் இணைப்பின் மூலம் கொழும்பு, கிரேன்ட் ஒரியன்டல் ஹோட்டலினை அதிசொகுசு ஹோட்டல் ஒன்றாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக சாத்தியவள ஆய்வினை மேற்கொள்வதற்கு சிங்கப்பூரின் HPL Hotels and Resorts நிறுவனத்தின் மூலம் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் குறித்த யோசனைகளை மதிப்பிடுவதற்காக வேலைத்திட்ட குழுவொன்றை நியமிப்பதற்கும், அரசாங்கத்தின் வழிகாட்டல்களுக்கு அமைவாக இது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்கள், அரச வியாபார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ கபீர் ஹாஷிம் அவர்கள் மற்றும் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வியாபாரங்கள் அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்கள் ஆகியோர் முன்வைத்த ஒன்றிணைந்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.