மேலுதடு கருப்பா இருக்கா? ரோஜா நிறத்திற்கு மாற்ற என்ன செய்யலாம்?

அதிக சூட்டினால், அடிக்கடி லிப்ஸ்டிக் போடுவதால், மற்றும் புகைப்பிடிப்பதால் உதடுகள் கருப்பாக மாறுகிறது. ஆனால் இதில் என்ன பிரச்சினையென்றால் பெண்கள் அந்த கருமையைப் போக்க விரும்பாமல், லிப்ஸ்டிக் போட்டு கருப்பான உதட்டை மறைக்கின்றனர்.

இப்படி செய்வதால் மேலும் உதட்டில் கருமை அதிகமாகிறது. பின்னர் அதனைப் போக்கவே முடியாதபடி ஆகிவிடும். ஆகவே உதட்டின் கருப்பை மறைக்க நினைக்காமல் அதனைப் போக்க முயற்சி செய்யுங்கள். உதட்டுக் கருமையைப் போக்க சற்று நாட்கள் பிடிக்கும், உடனடியாக பலனை எதிர்ப்பார்க்க வேண்டாம். அவ்வாறான நல்ல பலன் தரக் கூடிய குறிப்புகளை பார்க்கலாம்.

கேரட் ஜூஸ் :
கேரட் ஜூஸை எடுத்து ஒரு பஞ்சில் நனைத்து தினமும் உதட்டில் தடவிக் கொண்டு வந்தால் நல்ல பலன் தெரியும். வறட்சியான வெடித்த உதடுகள் வசீகரமாக மாறும். உதடு நல்ல இஞ்சிவப்பு நிறத்தில் மாறும்.

தக்காளி சாறு மற்றும் மஞ்சள் :
தக்காளி சாறு எடுத்து அதில் சிறிது மஞ்சள் கலந்து உதட்டில் தடவ வேண்டும். காய்ந்ததும் கழுவுங்கள். தினமும் செய்து வந்தால் உதடுகள் மீண்டும் சிவப்பாகி வருவதை காண்பீர்கள்.

பிரஷ் :
தினமும் காலை மற்றும் இரவில் டூத் பிரஷினால் சில நொடிகள் மசாஜ் செய்யுங்கள். இப்படி செய்தால் ரத்த ஓட்டம் தூண்டப் பெற்று இறந்த செல்கள் வேகமாக அழிகின்றன. இதனால் கருமையான நிறம் மாறி சிவப்பாக ஜொலிக்கின்றது.

உருளைக் கிழங்கு சாறு :
தினமும் இரவில் தூங்குவதற்கு முன் உருளைக் கிழங்கு சாற்றினை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். உருளைக் கிழங்கின் ப்ளீச் செய்யும் குணம் உதட்டின் கருமையை போக்கும். நல்ல நிறத்தையும் தரும்.

பீட்ரூட் சாறு :
பீட்ரூட் துண்டை அல்லது சாற்றினை உதட்டில் பூசி காய்ந்த பின் கழுவினால் உதடுகள் மெருகேறும். சிவப்பு நிறம் பெறுவதோடு இயற்கை லிப்ஸ்டிக்காக் விளங்குகிறது.

ஆரஞ்சு தோல் :
ஆரஞ்சு தோலை வெயிலில் காய வைத்து பொடி செய்து அதனை தேன் கலந்து தினமும் உதட்டில் தடவி வாருங்கள். உதட்டின் கருமை வெகு விரைவில் மறைந்து விடும்.