ஹட்டன் – வட்டவலை உள்ளிட்ட பகுதிகளில் பாவனைக்கு உதவாத அரிசி வகை ஒன்று விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான அரிசி குறித்து பாவனையாளர்கள் முன்வைத்த முறைப்பாடுகளை தொடர்ந்து, பொதுசுகாதார பரிசோதகர்கள் குறித்த பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களை பரிசோதனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் அரிசி வகை ரூபா 50 முதல் 60 வரையான விலையில் விற்பனை செய்யப்படுகிறதாகவும் கூறப்படுகிறது.
மேலும், குறித்த அரிசியை சமையலுக்காக பயன்படுத்தும் போது, கைகளில் ஒட்டிக் கொள்ளும் தன்மையை வெளிப்படுத்துவதாகவும் பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.