பயிற்சி கால எல்லை 05 வாரமாக குறைத்து சைட்டம் பட்டதாரிகளை வைத்திய சபையில் பதிவு செய்ய தீர்மானித்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று முன்தினம் விடுத்திருந்த அறிக்கை குறித்து வைத்திய சபையின் நடவடிக்கை குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.
இற்றை வரை, வைத்திய சபை தெளிவான கொள்கையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், தற்போது ஒருசில அழுத்தங்களுக்கு வைத்திய சபை உள்ளாகியுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. சைட்டம் நிறுவனத்தினை தனியார் நிறுவனத்திடம் வழங்குவது குறித்து அரசு வெளியிட்டிருந்த அறிக்கை குறித்தும் இன்னும் சந்தேகம் நிலவுவதாக மீண்டும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அரச வைத்திய அதிகாரிகளது சங்கம் மேலும் தெரிவிக்கையில், சைட்டம் நிறுவனத்தின் நடப்பு முதல் ஆண்டு மாணவர்கள் பரீட்சை இன்று(19) ஆரம்பமாகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
#reeshma..