மாலக சில்வா நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வா இன்று (19) நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

மாலக சில்வாவை கைது செய்யுமாறு நேற்று(18) பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமைய அவர் நேற்று(18) நீதிமன்றில் முன்னிலையாக தவறியமை தொடர்பில் அவர் இன்று மருத்துவ அறிக்கை ஒன்றினை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

இது தொடர்பில ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிகா விமலசிறி குறித்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் கொழும்பிலுள்ள இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் பிரித்தானிய பிரஜை ஒருவருடன், ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் நீதிஜமன்றில் முன்னிலையாக தவறியமைக்காக இவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#reeshma..