சுகாதாரத்திற்கென ​தொலைக்காட்சி சேவை நாளை முதல்..

நாட்டு மக்களிடையே சுகாதாரத்தைப் பேணும் நோக்கில், தேசிய சுகாதாரத் தொலைக்காட்சிச் சேவையொன்று, ​நாளை(20) முதல் கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு கலதாரி ஹோட்டலில், குறித்த இந்தத் தொலைக்காட்சிச் சேவை ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், அதன் பிரதம விருந்தினராக, சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன கலந்து கொள்ளவுள்ளார்.

நாட்டு மக்களின் சுகாதார நிலைமையைப் பேணல் மற்றும் சுகாதாரமானதொரு சமூகத்தைக் கட்டியெழுப்பல் என்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே, குறித்த இந்தத் தொலைக்காட்சிச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

தொற்றா நோய்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல், குடும்ப நலச் சுகாதாரம் தொடர்பில் அறிவூட்டல், போஷாக்கு, விளையாட்டு மற்றும் வீட்டு வாழ்க்கை தொடர்பில் தெளிவூட்டல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், இந்தத் தொலைக்காட்சிச் சேவையூடாக ஒளி, ஒலிபரப்பப்படுமென, சுகாதார அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் பிரசன்ன அதிகாரி தெரிவித்தார்.

#reeshma..