பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் திறமை தொடர்பில் எந்த விதத்திலும் திருப்தியும் அடைய முடியாது என அணித்தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார்.
போட்டியின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் குறித்த போட்டியின் மூலம் எதிர்ப்பார்ப்புக்கள் உடைந்துள்ளதாகவும்,
சமீப காலமாக இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் மிகவும் மோசமான முறையில் விளையாடி வருவதாகவும் சந்திமால் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய பங்களாதேஸ் அணி வீரர்களை பாராட்டுவதாக இலங்கை அணித்தலைவர் தினேஸ் சந்திமால் தெரிவித்திருந்தார்.
#rishma..