பிரதமரைப் பதவியிலிருந்து நீக்க முயற்சித்தால், ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை..

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அந்தப் பதவியிலிருந்து நீக்க முயற்சித்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதாக ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

அதில் மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர், பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படும் என்றும், புதிய அரசாங்கம் உருவாக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியிடப்படுகின்றன.

அவை வெறும் பிரச்சாரங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

ஏதாவது ஒரு விதத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிலியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும்.

ஒன்றிணைந்த எதிரணியினரின் ஆதரவும் அதற்குப் பெற்றுக் கொள்ளப்படும். நல்லாட்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் எமது கட்சி செயற்படுகிறது.

இந்த நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர், ஐ.தே.கட்சியின் அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.

அதற்கு ஜனாதிபதியின் ஆதரவு எமக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.