கதிர்காமம் பிரதேசத்தில் காவற்துறையின் துப்பாக்கிப் பிரயோகத்தால் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இரகசிய காவற்துறையினர் குழுவொன்று குறித்த பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.
காவற்துறை மா அதிபரின் பணிப்புரையின் கீழ் இன்று(21) முற்பகல் அவர்கள் கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்றதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
நேற்று(20) இரவு கதிர்காமத்தில் காவற்துயைின் ஆணையை பொறுட்படுத்தாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது காவற்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில், குறித்த நபர் உயிரிழந்தார்.
பின்னர் குறித்த பிரதேசத்தில் காவற்துறையினருக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்காரணமாக குறித்த பகுதிக்கு காவற்துறையினரின் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#rishma..