இலங்கை, சிம்பாப்பே மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்றும் முக்கோண ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 4வது போட்டியில் சிம்பாப்வே அணியை வீழ்த்தி இலங்கை அணி 5 விக்கட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய சிம்பாப்பே அணி 44 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களை பெற்றது.
இதனை தொடர்ந்து தமது வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 44.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் தினேஷ் சந்திமால் அதிகபட்சமாக 49 ஓட்டங்களையும், திசர பெரேரா 39 ஓட்டங்களுடனும் தினேஸ் சந்திமால் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது இறுதி வரை களத்தில் இருந்து வெற்றிக்கு வழி வகுத்தனர்.
பந்து வீச்சில் சிம்பாப்வே அணி சார்பில் Blessing Muzarabani 3 விக்கட்டுக்களை வீழத்தினார்.
இந்த தொடரில் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்றால் இந்த போட்டியில் இலங்கை அணி கட்டாயம் வெற்றிப் பெற வேண்டி இருந்த நிலையில் இந்த போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளது.
இலங்கை அணி முன்னதாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#rishma