தபால் வாக்கெடுப்பு இன்று மற்றும் 25,26ம் திகதிகளில்..

தபால் வாக்கெடுப்பின் முதலாவது கட்ட வாக்கு பதிவு இன்று(22) இடம்பெறுவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்திருந்தார்.

தேர்தல்கள் அலுவலகம், மாவட்ட செயலகம் மற்றும் காவற்துறை ஆகியவற்றுக்கான தபால் வாக்குபதிவு இன்று(22) முற்பகல் இடம்பெறவுள்ளது.

இம்முறை தபால் வாக்கு பதிவுக்காக 5 லட்சத்து 60 ஆயிரத்து 536 அரச பணியாளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

ஏனைய அரச சேவையாளர்களுக்கான தபால் வாக்கு பதிவு எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#rishma