சிங்கப்பூர் பிரதமரின் விஜயம் காரணமாக இன்று(22) சில வீதிகளில் சிறப்பு போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி ,கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் இருந்து கொழும்பு – கோட்டை மத்திய வீதி வரை , பிற்பகல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
களனி பாலம் , பேஸ்லைன் வீதி , ஒருகொடவத்தை சந்தி , பொரளை சந்தி , டீ.எஸ் சேனாநாயக்க சந்தி , மல் வீதி சந்தி , லிபர்ட்டி சுற்றுவட்டம் , காலி முகத்திடல் சுற்றுவட்டம் , காலி முகத்திடல் மத்திய வீதி வரை இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
இன்று பிற்பகல் இலங்கை வரும் சிங்கப்பூர் பிரதமர் இம்மாதம் 24ம் திகதி இலங்கை நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#rishma