இன்று கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விசேட கூட்டம்..

பாராளுமன்ற வளாகத்தில் கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் ஒன்று இன்று(22) இடம்பெறவுள்ளது.

முறி விநியோக தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதத்தை நடத்துவது குறித்த திகதியை தீர்மானிப்பதற்காகவே குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கு கொள்ளவுள்ளனர்.

இதன்போது குறித்த அறிக்கையின் மாதிரிகள், கட்சித்தலைவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

#reeshma