முழந்தாளிடப்பட்ட அதிபருக்கு நீதிகோரியும் அரசினை எச்சரித்தும் நாளை பாரிய ஆர்ப்பாட்டம்..

பதுளை தமிழ் மகளிர் பாடசாலை அதிபருக்கு நீதிகோரி நாளை(23) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த ஆர்ப்பாட்டம் பிற்பகல் இரண்டு மணிக்கு கொழும்பு ஆமர் வீதி சந்தியில் ஆரம்பமாகவுள்ளதாகவும், குறித்த அதிபருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் மேல்மாகாண பாடசாலைகளின் அனைத்து அதிபர், ஆசிரியர்களையும் பங்கேற்குமாறும், தொழிற் சங்கங்களையும், சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் பங்கேற்குமாறும் அழைப்பு விடுப்பதாக மேலும் குறித்த அழைப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், உரிய அதிபருக்கு நீதி கிடைக்காதவிடத்து நாம் அடுத்த கட்டமாக நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்பதையும் எச்சரிக்கையாக தெரிவிக்கின்றோம் என குறித்த சங்கம் அரசினை எச்சரித்துள்ளது.

#reeshma