இலங்கைக்கு நியமிக்கப்பட்டுள்ள 5 புதிய தூதுவர்களுக்கு ஜனாதிபதியினால் நியமனக் கடிதங்கள்…

இலங்கைக்கு நியமிக்கப்பட்டுள்ள 5 புதிய தூதுவர்கள் இன்று(23) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தனது நியமனக் கடிதங்களை கையளித்தனர்.

ஜனாதிபதி மாளிகையில் வைத்து குறித்த நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சூடான் , வியட்நாம் , மியன்மார் , கொரியா மற்றும் சீன போன்ற நாடுகளுக்காக இவ்வாறு புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.