உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் பெப்ரவரி 9ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில், கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று(23) இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது, வாக்குகளை எண்ணும் போது பயன்படுத்தக்கூடிய முறைகள் குறித்தும், பாதுகாப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
வாக்குச் சீட்டுக்கள் அனைத்தும் எதிர்வரும் 6ஆம் திகதி தமக்கு கிடைக்கப்பெறும் என்றும் அதனை தொடர்ந்து எதிர்வரும் 7ஆம் திகதி அவற்றை, ஒவ்வொரு பிரிவுகளுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.